செய்தி - செ.துஜியந்தன்
பாண்டிருப்பு பிரதான வீதியின் வாள்மாற்றும் சந்தியில் இடம் பெற்ற (26.09.2017 ) வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் மதியம் 1.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது விபத்தில் காயமடைந்த கல்முனை வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கணேஸ்வரன்(வயது 54), எழில்வேந்தன் (வயது 26) ஆகியோர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சிறியரக டிப்பர் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியின் ஓரத்தில் பாதையை கடப்பதற்க்காக காத்திருந்த வைத்தியரின் மோட்டார் கார் மீது மோதித்தள்ளியதுடன் எதிரே வந்த மோட்டர்ச்சைக்கிள் மீதும் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு உடன் கொண்டு செல்லப்பட்டனர்.
வைத்தியரின் மோட்டார்கார் சேதமடைந்துள்ளது. இதேபோன்று மோட்டார் சைக்கிளும் சேதமைடைந்துள்ளது. அத்துடன் பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய உற்சவத்திற்காய் வீதியின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த 14 அடி உயரமான சுவாமிபட கட் அவுட்டும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்



