கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள இளம் தமிழ்க் கலைஞர்களுக்கான இலக்கியப் பயிலரங்கு ஒன்று பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் கலாசார உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன், மூத்தகவிஞர் மு.சடாட்சரன், கவிஞர் முகில்வண்ணன், எழுத்தாளர் சபா சபேஷன் ஆகியோர் கலந்து கொண்டு கவிதை, சிறுகதை, ஆக்க இலக்கியம் தொடர்பில் கருத்துரைகளை வழங்கினார்கள்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் உமாவரதராஜன் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் காணலாம்


