- சபாபுத்திரன் -
இந்நிகழ்வில் சிறுவர் நூலகப் பகுதி திறந்து வைக்கப்பெற்றதுடன். புதுக்குடியிருப்பு பொது நூலகத்தின் வெள்ளி விழாவை (1991 - 2016) சிறப்பிக்கும் முகமாக புதுவை ஒளி எனும் தொகுப்பு நூல் வெளியீட்டு வைக்கப்பெற்றது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2017 யில் 70 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் தேசிய வாசிப்புமாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.
“புதுவை ஒளி” வெளியீட்டினை சமாதான நீதவான் மா.சதாசிவமும் வெளியீட்டுரையை கதிரவன் த.இன்பராசாவும் நயவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸனும் ஆற்றினர்.
முதற் பிரதியை சமாதான நீதவான் பொ.சின்னத்தம்பி பெற்றுக்கொண்டார். தற்காலத்தில் வாசிப்பு அருகிப் போகின்றது, பெருகி வருகின்றது எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.