செய்தி - அகரம் துஜியந்தன்
விளைகை குறுந்திரைப் படம் வெளியீட்டு விழா இன்று 31-08-2017 இல் நடைபெற்றது.
பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் வெளியீட்டில் “விளைகை” குறுந்திரைப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. அகரம் செ.துஜியந்தன் தலைமையில் கல்முனை டிலானி ரெஸ்ற் இன் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா கலந்து கொண்டார்.
கலைஞர் ஆனந்தத்தில் ஒரு அனல் தயாரிப்பில் துறையூர் கிரிதாஸ்சின் எண்ணம், எழுத்து இயக்கம், இசை, தொகுப்பில் விளைகை குறுந்திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம்
கையடக்கத்தொலைபேசியினை பாயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துவதனால் ஏற்படும் விபத்தும் அதனால் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் ஏழு நிமிடங்களுக்குள் கச்சிதமாக கருத்தினை சொல்கின்றது.
பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஆறாவது வெளியீடாக விளைகை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன், அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லப்பணிப்பாளர் இறைபணிச் செம்மல் த.கைலாயபிள்ளை, கவிஞர் மு.சடாட்சரன், எழுத்தாளர் எஸ்.அரசரெத்தினம், ஒய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம், கல்முனை தமிழ் பிரிவு கலாசார உத்தியோகஸ்தர் தே.பிரபாகரன், கல்முனை கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.புஸ்பகீதா, களுவாஞ்சிக்குடி கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி டிமாலினி , மாணவ மீட்பு பேரவை தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ், எழுத்தாளர் சபாசபேஷன், வர்த்தகர் சங்கரப்பிள்ளை உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.














