1995-ல் இந்த குழந்தை ரஜினியின் மெகாஹிட் திரைப்படமான பாட்ஷாவில் நடித்து. பிறகு 1996-ல் இதே குழந்தை விஜயின் நடிப்பில் வெளியான பூவே உனக்காக படத்திலும் நடித்தது.
ஆனால், 1997-ல் சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தின் மூலமாக தான் இக்குழந்தை பெரிய பிரபலம் அடைந்தது. நடிப்பு, டயலாக் டெலிவரி, முகபாவனை என அனைத்து விதத்திலும் அசத்தியிருந்தது இந்த குழந்தை.
இப்போ இந்த குழந்தை என்ன செஞ்சுட்டு இருக்காங்க தெரியுமா?
கனா காணும் காலங்கள்!
விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் எனும் பள்ளி வாழ்க்கை தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஹேமலதா தான் அந்த பிரபல சுட்டி குழந்தை.
நடித்த படங்கள்!
பாட்ஷா, பூவே உனக்காக, சூரியவம்சம், இனியவளே, பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன், மதுரை, ஜி, பாரிஜாதம், திமுரு போன்ற திரைப்படங்களில் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
சித்தி!
கனா காணும் காலங்கள் சீரியலுக்கு முன்னரே ராதிகா நடித்த முதல் சீரியலான சித்தியில் நடித்துள்ளார் ஹேமலதா.
மற்றும் தென்றல் போன்ற தொடர்களிலும் தோன்றியிருக்கின்றார்


