செ.துஜியந்தன்
கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் அருச்சுனன் தவநிலை செல்லும் காட்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருச்சுனன் பாசுபதம் பெறச் செல்லும் போது இடைநடுவில் அருச்சுனனுக்கு ஏற்படும் சோதனைகளை குறிக்கும் வகையில் பேரண்டச்சி எனும் அழகி வழிமறிப்பது, காட்டு விலங்குளால் ஏற்படும் துன்பநிலையயை எடுத்துக்காட்டும் வகையில் பன்றி வழிமறிப்பது போன்ற நிகழ்வுகள் இங்கு நடித்துக் காண்பிக்கப்படுகின்றன. அத்துடன் அரவானைப் பலி கொடுக்கும் நிகழ்வும் இடம் பெறுகின்றது.
இன்று (06.10.2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குபஞ்சபாண்டவர்கள் திரௌபதை தேவாதிகள் சகிதம் தீ மிதிப்பில் ஈடுபடும் வைபவம் நடைபெறவுள்ளது. நாளை சனிக்கிழமை பாற்பள்ளயத்துடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.


