யோனிப்பொருத்தமில்லாமல் இல்லறம் தாம்பத்தியம் நிலைக்காதென திருமண ஜாதக ஆய்வாளர்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர் ஆண் பெண் உறவு தொடர்பாக எமது முன்னோர்கள் மிகவும் முக்கியமாக ஆராய்ந்து ஜோடி சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களும் பொருத்தம் பார்க்கப்பட்டு திருமணங்கள் நிட்சயிக்கப்பட்டன.
திருமணப் பொருத்தத்தில் யோனிப்பொருத்தம் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. பலருக்கு தெரியும். இது செக்ஸ் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி முன்னோர்கள் வைத்திருக்கும் ஒரு முறை. தாம்பத்திய உறவின் சுகம் திருப்த்திநிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் அளவுகோல் இது. ஆண்பெண் யோனி நிலைகளை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறையாக இருக்கின்றது இது .
நட்சத்திரங்கள் 13 மிருகங்களின் பெயரைக்கொண்டு பிரிக்கப்பட்டு உள்ளது. உத்தராட நட்சத்திரம் மட்டும் கீரி என்றும் சில நூல்கள் மலட்டு பசு என்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு . ஆண்பெண் பகை மிருகம் மட்டுமே பொருத்தமில்லை என்று சொல்வார்கள். பகை மிருகங்கள் சேராமல் பார்த்துக்கொள்வார்கள் பெரியவர்கள். இதில்
1. அச்சுவினி – ஆண் குதிரை
2. சதயம் – பெண் குதிரை
3. பரணி – ஆண் யானை
4. ரேவதி – பெண் யானை
5. கார்த்திகை – பெண் ஆடு
6. பூசம் – ஆண் ஆடு
7. ரோகினி – ஆண் பாம்பு
8. மிருகசீரிடம் – பெண் பாம்பு
9. திருவாதிரை – பெண் நாய்
10. மூலம் – ஆண் நாய்
11. புனர்பூசம் – பெண் பூனை
12. ஆயிலயம் – ஆண் பூனை
13. மகம் – ஆண் எலி
14. பூரம் – பெண்எலி
15. உத்தரம் – ஆண் மாடு
16. உத்தரட்டாதி – பெண்மாடு(பசு)
17. அத்தம ; – பெண் எருமை
18. சுவாதி – ஆண் எருமை
19. விசாகம் – ஆண் புலி
20. சித்திரை – பெண் புலி
21. அனுஷம் – பெண் மான்
22. கேட்டை – ஆண் மான்
23. பூராடம் – ஆண் குரங்கு
24. திருகோணம் – பெண் குரங்கு
25. உத்தராடம் – ஆண் கீரி
26. அவிட்டம் – பெண் சிங்கம்
27. பூரட்டாதி – ஆண் சிங்கம்
ஒவ்வொரு விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும்.
குதிரை-எருமை
யானை-சிங்கம்
ஆடு-குரங்கு
பாம்பு-எலி
பசு-புலி
பூனை-எலி
கீரி-பாம்பு
மான்-நாய்
இவை சேரக்கூடாது யோனிவழி பிரிக்கப்பட்ட பகை மிருகங்கள். பகை மிருகங்களை சேரக்கூடாது என்கிறார்கள். அத்துடன் இருவரும் ஒரு யோனியாகிலும், ஆண்களுக்கு ஆண்யோனியும் பெண்களுக்கு பெண்யோனியாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம் என்றும் இருவருக்கும் ஆண் யோனியாகில் மத்திம பலன் என்றும் பெண்ணுக்கு ஆண் யோனியும் ஆணுக்கு பெண்யோனியும் பொருத்தம் வராது என்றும் ஜோதிட சாத்திரம் சொல்கிறது. ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்கும் போது அவர்கள் மிக நீண்ட பாலியல் சுகம் அடைய வேண்டிய என்ற சிந்தனை தொன்றுதொட்டே எமது சமூக அமைப்புக்களில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. சரி செக்ஸ் திருப்தி என்பது வெறுமனே உடலுறவில் மட்டும் அல்லது ஆணுறுப்பின் நீள அகலத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவதில்ல. அது மனதோடும் உடலோடும் சம்பந்தப்பட்ட விடயமாகும்.
