செய்தி - சசி
'கற்றலை ஊக்குவிப்போம், ஆற்றலை வளர்ப்போம்' எனும் தொனிப் பொருளில் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் மட் /தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலைச் சமூகம் ஒன்றிணைந்து நடத்திய சிறுவர் தின நிகழ்வு 04.10.2017 புதன் கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், Natoin Trust Bank முன்னாள் முகாமையாளர் திருமதி ஏஞ்சலா பிலிப் ஆகியோர் சிறப்பு அதிதியாகப் பங்குபற்றினர் மற்றும் கௌரவ அதிதிகளாக இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் சிவகுமார், தாழங்குடா விநாயக வித்தியாலய அதிபர் மதிசுதன், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி சு.பூபாலசிங்கம், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவகத் தலைவர் இன்பராசா, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இளங்கோவன், கிராம சேவை உத்தியோகத்தர் சிருஷ்னானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் பாடசாலையின் மாணவர்கள் அனைவருக்கும் கதிரவன் கமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.















