செ.துஜியந்தன்
கிழக்கு மாகாண அரச தமிழ் இலக்கிய விழா கல்முனையில் மிககோலாகலமாக ஆரம்பமாகியது. மருதமுனை அல்- மனார் மத்தியகல்லூரியில் இருந்து கல்முனை நகர் ஊடாக தமிழ் -முஸ்லிம் மக்களின் கலைகலாசரத்தை பிரதிபலிக்கும் வகையில் பண்பாட்டுப்பவனி நடைபெற்றதுடன் நிகழ்வுகள் நடைபெறவுள்ள கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் தமிழ் அன்னைக்கு மலர்மாலை அணிவித்து தமிழ் வாழ்த்துபாடலுடன் தமிழ் இலக்கிய விழாவின் முதலாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து 01ஆம், 02 ஆம் திகதிகளில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் கிழக்குமாகாண தமிழ் இலக்கியவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








