சுந்தரமதி வேதநாயகம் எழுதிய "தூக்கணாம் குருவிகள் " சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 13.10.2017 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பு நாவற்குடா வில் அமைந்துள்ள இந்து கலாசார நிலையத்தில் பிற்பகல் 4.30 மணியளவில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் (கவிஞர். அண்ணதாசன்) கலந்து சிறப்பித்தார். கெளரவ அதிதிகளாக மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கக் காப்பாளரும் முன்னாள் வடக்கு -கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருமான கலாபூஷணம் செ.எதிர்மன்னசிங்கம், களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத் தலைவர் திரு.ப.குணசேகரம், சித்தி விநாயகர் மற்றும் பேச்சியம்மன் ஆலயங்களின் தலைவர் திரு.ச.சந்திரகுமார், முனைப்பு ஸ்ரீலங்கா தலைவர் திரு.மா.சசிகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் திருமதி. பிரியா கருணாகரன் மற்றும் நூலாசிரியர் சுந்தரமதி வேதநாயகம் ஆகியோரால் தமிழ் மொழி வாழ்த்து பாடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து செல்வி.வே.அனுஜா வின் வரவேற்பு நடனமும் மட்டுநகர் சிவ வரதகரன் இன் வரவேற்புரையும் இடம் பெற்றன. கதிரவன் த. இன்பராசாவின் தலைமையுரையைத் தொடர்ந்து பாலமீன்மடு இரா கலைவேந்தன் இனால் நூலாசிரியர் அறிமுகமும் நூல் வெளியிடும் இடம் பெற்றன. நூலின் முதற் பிரதியை சைவப் புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொண்டார். நூல் நயவுரை கண்ணகி கலை இலக்கியக் கூடல் இன் செயலாளரும் கவிஞருமாகிய அன்பழகன் குருஸ் இனால் நிகழ்த்தப் பெற்றது. இதையடுத்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றன.
அதைத் தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும் இறுதியாக கவிஞர் அழகு தனு இன் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
தூக்கணாம் குருவிகள் நூல் பிரதி பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 0769799257 (கதிரவன்) எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.













