வஞ்சிமகள் நீவாய் திறவாய்
-----------------------------------------------------வில்லூரான்----------

பஞ்சு நெஞ்சம் பற்ற வைத்து
------பகல் இரவாய்க் கனவு தந்து
நெஞ்சக் கூட்டில் நின்று நாளும்
------நினைவு தந்தே என்னை ஆளும்
வஞ்சி வதனம் வந்து தோன்றும்
------வான நிலவாய் வந்த பெண்ணே
அஞ்சி நின்றேன் அன்பைச் சொல்ல
------அன்பே நீயும் வாய் திறவாய்
கொஞ்சும் சலங்கை காலில் ஆட
-----கோதை கண்டென் விழிகள் நாட
மஞ்சள் முகமே மயக்கி என்னை
-----மனதில் மகிழ்வு மலரச் செய்தே
கொஞ்ச நேரம் உன்னைக் காணாது
------கொடுமை என்றே விழிகள் கோபம்
விஞ்சி அந்த வீதியிலே நாளும்
------விரதம் கொள்ளும் விபரம் அறியாய்
நெஞ்ச வானில் நீந்தும் நிலவே
------நிதமும் நினைவில் வந்த எழிலே
கஞ்ச மலராய் விழிகள் விரியும்
------காதல் மொழியை கணமும் எறியும்
அஞ்சல் செய்தேன் அன்பை நானும்
------ஆவல் பொங்கும் அழகில் நானும்
வஞ்சி மகளேநீ வாய் திறவாயோ
------வானம் நிலவாய் வாழ்வோம் என்றே
-----------------------------------------------------வில்லூரான்----------

பஞ்சு நெஞ்சம் பற்ற வைத்து
------பகல் இரவாய்க் கனவு தந்து
நெஞ்சக் கூட்டில் நின்று நாளும்
------நினைவு தந்தே என்னை ஆளும்
வஞ்சி வதனம் வந்து தோன்றும்
------வான நிலவாய் வந்த பெண்ணே
அஞ்சி நின்றேன் அன்பைச் சொல்ல
------அன்பே நீயும் வாய் திறவாய்
கொஞ்சும் சலங்கை காலில் ஆட
-----கோதை கண்டென் விழிகள் நாட
மஞ்சள் முகமே மயக்கி என்னை
-----மனதில் மகிழ்வு மலரச் செய்தே
கொஞ்ச நேரம் உன்னைக் காணாது
------கொடுமை என்றே விழிகள் கோபம்
விஞ்சி அந்த வீதியிலே நாளும்
------விரதம் கொள்ளும் விபரம் அறியாய்
நெஞ்ச வானில் நீந்தும் நிலவே
------நிதமும் நினைவில் வந்த எழிலே
கஞ்ச மலராய் விழிகள் விரியும்
------காதல் மொழியை கணமும் எறியும்
அஞ்சல் செய்தேன் அன்பை நானும்
------ஆவல் பொங்கும் அழகில் நானும்
வஞ்சி மகளேநீ வாய் திறவாயோ
------வானம் நிலவாய் வாழ்வோம் என்றே