துறையூர் தாஸன்
திருகோணமலை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதயத்தில்,காணமல் போனோர் அலுவலகம்,வலிந்து காணமலாக்கப்பட்டோர் சார் ஐக்கிய நாடுகள் தராதரங்கள் மற்றும் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் பணிக்குழு,ஐக்கிய நாடுகள் பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்,கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு,அகம் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் கே.லவகுசராசா தலைமையில் இன்று (07.10.2017) இடம்பெற்றது.
மனித உரிமை செயற்பாட்டாளர் றுக்கி பெணார்ன்டோ வளவாளராகவும் சட்டத்தரணி திருமதி மங்கலேஸ்வரி சங்கர் இலகுபடுத்துனராகவும் நிகழ்வினை செயற்படுத்தியிருந்தார்.
காணமலாக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கையில் மற்றும் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள்,அங்கலாய்ப்புக்கள்,அரசினால் உத்தியோகபூர்வமாக வெளியீடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்கள் மற்றும் எண்ணிக்கைகள்,முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள்,செயற்பாடுகள், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாகவும் இதன்போது காத்திரமாக கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்ட சுயாதீன தேசிய ஊடகவியலாளர்கள்,சுமார் நாற்பதுக்கு மேற்பட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.


