மட்/மண்முனை மேற்கு அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய ஆசிரியர் தின விழா அதிபர் சு.தவராசா தலைமையில்,இடம்பெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு வலயகல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம்,மட்டு மேற்கு வலயக்கல்வி முன்னாள் பணிப்பாளர் சத்தியநாதன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,விகிதாசார தேர்தல் முறை என்பது வட்டார தேர்தல் முறையாக உள்ளூராட்சி தேர்தலிலே மாற்றப்பட்டிருக்கின்றது.உள்ளூராட்சி தேர்தல் முறையிலே யாராக இருந்தாலும்,வாக்களிக்கின்ற விகிதத்தை எமது தமிழ் மக்கள் யாருக்காவது வாக்களிக்க வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலிலேயிருந்த விகிதாசார தேர்தல் முறையும் இப்பொழுது மாற்றப்பட்டிருக்கின்றது. விகிதாசாரத் தேர்தலில்,ஐம்பதுக்கு ஐம்பது வீதம் விகிதாசாரத் தேர்தலாகவும் தொகுதி ரீதியான தேர்தலாகவும் இடம்பெற இருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தொகுதி ரீதியான பிரதிநிதித்துவ தேர்தல் முறை வரவுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.தொகுதி ரீதியான பிரதிநிதித்துவ முறையில்,கடந்த காலங்களில் வாக்களிப்பது போன்று எந்த ஒரு நபர்களுக்கும் வாக்களிப்பதில்லை.எந்த கட்சி கேட்கின்றதோ அந்த கட்சிக்கு மாத்திரம் வாக்களிக்கின்ற தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.தமிழ் பிரதிநிதித்துவத்தை கூட்டுகின்ற போது பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களை கல்விக்காக சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பேற்படும்
கடந்த கால விடுதலை போராட்ட காலத்தில் இப்பாடசாலையில் கல்வி கற்ற 85 பழைய மாணவர்கள் மாவீரர்களாக இம்மண்ணுக்கு தியாகம் செய்த வரலாறு இப்படுவான்கரை மண்ணுக்கு இருக்கின்றது.வரலாறுகளை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது என்றார்.
துறையூர் தாஸன்.