இன்று (01.11.2017) மாலை 6.30 மணியளவில் பெரியகல்லாறு பிரதான வீதியில் இடம் பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றுடன் மோட்டார்ச் சைக்கிளும்,சிறிய ரக டிப்பர் வாகனம் ஒன்றும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - செ.துஜியந்தன்


