மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில் நுட்பகல்லூரிக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்ரவண்டி ஒன்று வீதியின் ஓரத்தில் இருந்த நபர் ஒருவரின் மீது மோதியதில் அந்நபர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (21.11.2017) செவ்வாய்க்கிழமை பி.ப2 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் கிரான்குளம் கிராமத்தைச்சேர்ந்த மாட்டுவண்டில் மூலம் வியாபாரத்தில் ஈடுபடும் பரமலிங்கம் (58வயது) என்பவரே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து முச்சக்கரவண்டியில் வேகமாக பயணித்த சாரதி தமது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த கடையொன்றில் மோதியதுடன் அக்கடைக்குள்இருந்த
நபரையும் மோதியுள்ளது. காத்தான்குடியைச்சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - செ.துஜியந்தன்