இலங்கையின் சனத்தொகயில் 52 சத வீதமான பெண்களில் 1.8 வீதமான பெண்கள்தான் உள்ளூராட்சி பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள் பாராளுமன்றில் 2.8 வீதமான பெண்கள் இருக்கின்றார்கள்.52 வீதமான பெண்கள் இருக்கின்ற ஆணாதிக்கம் கூடிய சூழலில் எந்தளவுக்கு எந்த வகையில் பெண்கள் அரசியலுக்குள் இருக்கின்றார்கள் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என வட மாகண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குருந்தையடி சுனாமி வீட்டுத்திட்ட குடியேற்ற மக்களை 28.11.2017 அன்று சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
38 மாகாண சபை உறுப்பினர்களின் தான் மாத்திரமே பெண் உறுப்பினராக இருக்கின்றேன்.
இலங்கையில் 52 வீதமான பெண்கள் எதிர்கொள்கின்ற பாரிய பிரச்சினைகளை,அந்தப் பிரச்சினை பற்றி பேசுவதற்கு,பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு,பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு,அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொள்வதற்கு,எந்தளவு வீதம் பெண்களின் பிரச்சினைகளை பெண் பிரதிநிதிகள் கொண்டு செல்கின்றார்கள் என்றால் அது பூச்சியமாகவே இருக்கின்றது.
எதிர்வருகின்ற தேர்தல்களில் 25 வீத பெண்களினுடைய பதவிகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு வகுக்கப்பட்டிருக்கின்றது.25 வீதமான பெண்களை வெற்றி பெற்றவர்களுக்குள் உள்ளீர்ப்பு செய்யவேண்டிய கடப்பாடு தேர்தல் ஆணையாளருக்கு இருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் தமிழ்ச் சமூகத்துக்கு உண்மையாக யார் சமூகம் சார்ந்து செயற்பட இருக்கின்றார்களோ அபிவிருத்திக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்க இருக்கின்றார்களோ அவர்களேயே பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
துறையூர் தாஸன்.