அகர ஆயுதம் அமைப்பின் ஏற்பாட்டிலும் DMK Associat நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பரீட்சனின் முரண்பாட்டு சமன்பாடுகள் கவிதைநூல் வெளியீட்டு அறிமுகம் மற்றும் பிரதி மீதான வாசிப்பு அனுபவப்பகிர்வு என்பன, நிந்தவூர் பொது நூலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளரும் சமூக சிந்தனை அரசியல் செயற்பாட்டாளருமான அஷ்சேக் முபாரக் அப்துல் மஜீத் கெளரவ அதிதியாக கலந்துகொண்டார்.
எழுத்தாளரும் சமூக சிந்தனை அரசியல் செயற்பாட்டாளருமான அஷ்சேக் முபாரக் அப்துல் மஜீத், நூலாசிரியர் பரீட்சனிடமிருந்து கெளரவப் பிரதியை முதற்பிரதியாக பெற்றுக்கொண்டார்.
நூலின் வெளியீட்டுரையினை அகர ஆயுதத்தின் தலைவரும் கவிஞருமான இலக்கியன் முர்சித்தும் பிரதி மீதான வாசிப்பு அனுபவப்பதிவினை ஆய்வாளரும் எழுத்தாளருமான அப்துல் ரசாக், ஆய்வாளர் மர்லீன், ஆய்வாளரும் எழுத்தாளருமான இமாம் அத்னான் ஆகியோர் நிகழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- துறையூர் தாஸன் -

