அகில இலங்கை ரீதியிலான பாடசாலை சித்திர மற்றும் கட்டுரைப் போட்டித்தொடரில் பங்குபற்றி வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வு 01/11/2017 அன்று நடைபெற்றது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய " வேற்றுமையில் ஒற்றுமையே தேசத்தின் பலம் " என்ற தொனிப் பொருளில் இந்தப் போட்டிகளை நடத்தியிருந்தன.
பரிசளிப்பு விழாவில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஏற்பாட்டில், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடந்தது.
இதன்போது கட்டுரைப் போட்டி ஜூனியர் பிரிவில் வெற்றியீட்டி பரிசு பெற்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த பது/ கோணக்கலை தமிழ் மகா தமிழ் மகா வித்தியாலய மாணவி வீரக்குமார் அபிராமியையும், இவருக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியை திருமதி மூக்கன் அன்பு செல்வி ஆகியோரையும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
ந.மலர்வேந்தன்