மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஏற்பாட்டில்,நஞ்சற்ற ஆரோக்கியமான பாரம்பரிய உணவுப் பொருட்களின் விற்பனை சந்தை,நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில்,பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில் இன்று (01.11.2017) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத்தியமுகாம் அம்பிகை,சாளம்பைக்கேணி அல் அஷானியா,அல் சாபியா,மத்தியமுகாம் பிரிவின் அல் சகாறா ஆகிய மகளிர் அமைப்புகளால் பிரதேச செயலாளர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இச்சந்தை பிரதி புதன்கிழமை மாத்திரமே இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகனகுமார்,நிர்வாக உத்தியோகத்தர் ரீ.கமலநாதன்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
துறையூர் தாஸன்.