பாண்டிருப்புக் கிராமத்திலுள்ள பல சரக்கு கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருதாக பொதுமக்கள் கல்முனை வடக்கு சுகாதாரபணிமனையிடம் முறையிட்டுள்ளனர்.
சமீப காலமாக கல்முனைப் பிரதேசத்திலுள்ள பல சரக்கு கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்களை கடை உரிமையாளர்கள் பொருட்களுடன் கலந்து விற்பனை செய்துவருகின்றனர். வருடக்கடைசி என்பதால் பல கடைகளில் காலாவதியான பொருட்கள் கடைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் உள்ள கடையொன்றில் இவ்வாறான காலாவதியான பொருட்கள் நுகர்வோரை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சோய பக்கட் ஒன்றை கொள்வனவு செய்த ஒருவர் அதன் காலாவதி திகதி முடிவடைந்துள்ளதை அவதானித்து சுகாதார ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார்.
கல்முனை வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் ஆர்.கணேஸ்வரன் தெரிவிக்கையில் பிரதேசத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வமுடன் ஈடுபட்டுவருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் வர்த்தகர்கள் நுகர்வோரை ஏமாற்றி பொருட்களைவ pற்பனை செய்துவருகின்றர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்
செ.துஜியந்தன்