தாழங்குடா பொது நூலக வாசகர் வட்டத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு,அறிவு பெட்டகத்தின் திறவுகோல் வாசிப்பு எனும் தொனிப்பொருளில் வாசிப்பு மாத கலை கலாசார மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு,பொது நூலக கட்டிடத்தில் இன்று (30.10.2017) இடம்பெற்றது.
வாசகர் வட்ட தலைவர் செ.லெனாட் லொறான்ஸோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,மண்முனை பிரதேச சபை செயலாளர் ந.கிருஸ்ணப்பிள்ளை பிரதம அதிதியாகவும் மண்முனை பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமயந்தி விஜயகோகுலன்,ஆரையம்பதி பொது நூலக,நூலகர் திருமதி க.மகேந்திரலிங்கம்,ஆலோசனை சபைத் தலைவர் மா.காசிப்பிள்ளை ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் சமாதான நீதவான் ஆ.சிவலிங்கம்,செ.விமலேஸ்வரன்,கதிரவன் த.இன்பராசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
தாழங்குடா பொது நூலகத்தினால் தாழை எனும் தொகுப்பு நூல் பிரதம அதிதியினால் இதன்போது வெளியீட்டு வைக்கப்பட்டது.
புலமைப் பரிசில் பரீட்சையில் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் வாசகர் வட்டத்தினாலும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் கண்ணகி இந்து இளைஞர் மன்றத்தினாலும் நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.
நூலக உத்தியோகத்தர்கள்,நூலக ஆலோசனை சபை,கண்ணகி இந்து இளைஞர் மன்ற நிர்வாக உறுப்பினர்கள்,தாழங்குடா பொது நூலக வாசகர் வட்டத்தினர்,கிராம மட்ட சமூக அமைப்புகள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
துறையூர் தாஸன்.