மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தலும் கல்விப்பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (19.11.2017) மாலை நடாத்தப்பட்டது.
கிரான்குளம் சீமூன் விடுதியில் புதுக்குடியிருப்பு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் ரி.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.நல்லதம்பி,காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2017 மற்றும் 2016ஆம்ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஆசிரிய துறையில் சிறந்தசேவையாற்றிய ஆசிரிர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
செய்தி - கிருஸ்ணா
செய்தி - கிருஸ்ணா