குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் பேண்தகு பாடசாலை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் பாடசாலை மாணவர்களினால் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (24.11.2017) நடைபெற்றது.
மாணவரகள் மத்தியில் ஆரோக்கியமான, அறிவான, எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டு இப் பேண்தகு வேலைத்திட்டம் நாடளாவியரீதியில் 3409 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கிராம மக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் மாணவர்களினால் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள்
'சிறுவர்களாகி எங்களை வாழ விடுங்கள்', சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டிக்கிறோம்', சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்', 'போதைப்பொருளை ஒழிப்போம்', 'நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்வோம்', 'ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவோம்', போன்ற பல வாசகங்களைத் தாங்கி பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலம் சென்றனர்.

செய்தி - சேனாத்தூனா