வரையறுக்கப்பட்ட குருமண்வெளி சிக்கன சேமிப்பு கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் முப்பது ஆண்டு நிறைவு முத்து விழாவும் சாதனையாளர் பாராட்டு நிகழ்வும் சங்ககட்டிடத்தில் இன்று (26-11-2017) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் க.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன கூட்டுறவு, கால் நடை மீன்பிடி உணவு வழங்கல் அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்குமாகாணம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், பதிவாளருமான வி.திவாகரசர்மா, விசேட அதிதிகளாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் செல்வி கி.ஜெயந்திமாலா, மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.கனகசுந்தரம், மாவட்ட கூட்டுறவு சமாசனத்தின் தலைவர் இ.இராயப்பு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு குருமண்வெளிக்கிராமத்தில் கல்வியில் சாதனைபடைத்த மாணவர்களும், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களும் மற்றும் கிராமத்தின் சான்றோர்களும் பட்டம் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
செ.துஜியந்தன்
செ.துஜியந்தன்