கவிஞரும் எழுத்தாளருமான முகில்வண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் முதன்மை அதிதியாகவும் மாணவர் மீட்பு பேரவைத் தலைவரும் பொறியியலாளருமான எஸ்.கணேஸ் அதிதியாகவும் கலந்துகொண்டார்.
நூலாசிரியரின் தயார் திருமதி றோஸ்மேரி கிறகரி,அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதி கவீந்திரன் கோடீஸ்வரனிடமிருந்து நூலின் முதற் பிரதியை இதன்போது பெற்றுக்கொண்டார்.
நூல் வெளியீட்டுரையினை வித்தகர் எஸ்.அரசரெட்ணமும் சிறப்புரைகளை எழுத்தாளர் உமாவரதராஜன்,மன்சூர் ஏ.காதர், ஆத்மராஜ் றூத் சந்திரிக்கா ஆகியோரும் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை பைந்தமிழ்க்குமரனும் ஆற்றியிருந்தார்.
பா.மோகனதாஸ்