2017 ஆம் ஆண்டிற்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில், தென்மாகாணம் காலி திவித்துரை தோட்டத்தைச் சேர்ந்த மாணவன் சுப்பிரமணியம் மதுஷான் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இலங்கை தேசிய கராத்தே சம்மேளனம் ஒழுங்கமைப்பு செய்திருந்த இச்சுற்றுப்போட்டியில், 13 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்குபற்றி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் இம்மாணவன் பாடசாலைக்கு மாத்திரமன்றி திவித்துரை தோட்டத்திற்கும் பெருமை சேர்த்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துறையூர்தாசன்
கலைஞர்.ஏ.ஓ.அனல்