மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம், மைக்கல் லைற் விளையாட்டுக்கழகம் மற்றும் கிழக்கு மாகாண கருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஆகியன இணைந்து இவ் நடமாடும் மருத்துவ முகாமை ஒழுங்குசெய்துள்ளனர்.
நவம்பர் 3ஆம் திகதி ஊத்துச் சேனை மருத்துவ நிலையத்திலும், 4ஆம் திகதி கச்சக்கொடி சுவாமி மலை கிராம அபிவிருத்திச் சங்கக்கட்டத்திலும் காலை 9 மணிமுதல் மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம் மருத்துவ முகாம்களில் மட்டக்களப்பின் பிரபல வைத்தியர்கள் பங்கு கொண்டு பிரதேச மக்களின் மருத்துவப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் மருந்துகளையும் வழங்கவுள்ளனர்.
மருத்துவ முகாம் ஏற்பாட்டாளர்களால், இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளும் பயிற்சிப் புத்தகங்களும் புத்தகப் பைகளும் இதன்போது வழங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
துறையூர் தாஸன்.
