மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தரிப்பிட பெயர்ப்பலகை, இனம் தெரியாத விசமிகளால் நேற்று முன்தினம் இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக சாரதிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,துறைநீலாவணை கண்ணகி முன்பள்ளி பாடசாலைக்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தரிப்பிட பெயர்ப் பலகை,திட்டமிட்டு இரவு வேளையில் சேதமாக்கப்பட்டு பாதையில் வீசப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றனர்.
பிரதேச சபையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்டு பிரதேச சபையினரின் அனுமதியுடன் தரிப்பிட பெயர் பலகையினை பொருத்தியிருந்தோம்.இதனை சகித்துக்கொள்ள முடியாத நாசகார விஸமிகள் தரிப்பிட பலகையை சேதமாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயலகாவுள்ளது என கவலை தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.
துறையூர் தாஸன்.
