கிழக்கில் தொடரும் மழை காரணமாக பல வீடுகளிலும், வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.
கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலையினால் மீனவர்கள் மற்றும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீடித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளது.
வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்தங்கிய பிரதேசங்களுக்காக போக்குவரத்துமார்க்கமும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்