இம் மாணவிக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு,முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் கடந்த 01 ஆம் திகதி நடைபெற்றது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகமும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில்,பிரதம விருந்தினராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொண்டதுடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஜயசிங்க,தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்,வெளிநாட்டு பிரமுகர்கள்,மதகுருமார்கள், கல்வியியலாளர்கள்,அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பாடசாலை அதிபர் துரை.சபேசன்,பட்டிருப்பு கல்வி வலய சித்திரப் பாடத்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம் மற்றும் சித்திரப் பாடத்துறை ஆசிரியர்.பு.சிறிகாந் ஆகியோர் இம்மாணவிக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துறையூர் தாஸன்.