கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில்,2017 இல் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு மற்றும் கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு,பாடசாலையின் அதிபர் வீ.யோகராஜா தலைமையில் இன்று (14.11.2017) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் ,2017 ஆம் ஆண்டு தனது அபிவிருத்தி நிதியொதுக்கீட்டின் கீழ் குறித்த பாடசாலைக்கு 21 பிளாஸ்ரி்க் கதிரைகளை,அதிபரிடம் கையளித்ததுடன் 2017 புலமைப் பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியெய்திய ஆறு மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவித்தார்.
பாடசாலை அதிபரினாலும் மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலய பொருளாளரும் தமிழரசுக்கட்சியின் கல்முனை தொகுதிக்கான உபதலைவருமான க.கனகராஜாவும் இதன்போது கலந்து கொண்டார்.
துறையூர் தாஸன்


