சஞ்சயன்.
கவிஞர் காத்தநகரான் எம்.ரி.எம்.யூனுஸ் எழுதிய மூன்றாம் சாமத்து புன்னகை கவிதை நூல் வெளியீட்டு விழா,காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்றது.
இஸ்லாமிய இலக்கிய கழக முதல்வர் கவிமாமணி ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ் முதன்மை அதிதியாகவும் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
புரவலர் ஏ.எல்.மீராசாஹிபு அதிதிகளிடமிருந்து முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டதுடன் வெளியீட்டுரையினை கவிஞர் முகைதீன் சாலியும் நூல் நயவுரையினை கிழக்கு பல்கலை முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.யோகராசாவும் ஏற்புரையினை நூலாசிரியரும் இதன்போது ஆற்றியிருந்தார்.