மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையின் மாவட்ட இலக்கிய விழா,மாவட்ட செயலாளரும் அரச அதிபருமான மா.உதயகுமார் தலைமையில்,மட்டு மாநகர சபை மண்டபத்தில் இன்று (12.12.2017) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவி பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் பிரதம அதிதியாகவும் மட்டு மாநகர ஆணையாளர் நா.மணிவண்ணன் சிறப்பதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.
மாவட்ட மட்டத்தில் போட்டியிட்ட நாற்பது குறும்படங்களுள் அழகு தனுவின் எங்கே அப்பா எனும் குறுந்திரைப்படம் சிறந்த படைப்பு,சிறந்த நடிப்பு,சிறந்த பாடகி ஆகிய மூன்று விருதுகளை பெற்றுக்கொண்டதுடன் திருமதி வல்லிபுரம் மீனாம்பிகை,முருகேசு தம்பிப்பிள்ளை,கணபதி செல்லத்துரை,அலி முகம்மது முஸ்தபா,இராசமாணிக்கம் எதிர்மன்னசிங்கம் ஆகியோர் அதிதிகளினால் கெளரவிக்கப்பட்டு கலைச்செம்மல் விருதினையும் இதன் போது பெற்றுக்கொண்டனர்.
-சஞ்சயன்-


