கல்முனை விவேகானந்தா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா,கல்முனை விவேகானந்தா தமிழ் வித்தியாலய அதிபர் வீ.யோகராசா தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நேற்று மாலை (02.12.2017) இடம்பெற்றது.
கல்முனை கல்வி வலய செயற்திட்ட உத்தியோகத்தர் திருமதி பீ.ஈ.சந்திரரூபன்,முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வை.திருப்பதி,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தமிழ்த் தொகுதி அமைப்பாளர் ஆர்.சீ.பிரநீத்,கல்முனை இன்ரபிரைசைஸ் உரிமையாளர் என்.றொஹான் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
விவேகானந்தா முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களின் நடனம்,பேச்சு,கவிதை,வேடவுடை அபிநயம்,பாடலிசை,காட்சி அபிநயம் ஆகிய கலைநிகழ்வுகள் பார்ப்போரை பரவசப்படுத்தியதுடன் அதிதிகளால் மாணவர்களுக்கு நினைவுச் சின்னமும் பரிசுப்பொருளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,சமூக மட்ட அமைப்புகள்,ஆலயங்களின் தலைவர்கள் ஆகியோர் இதன் போது கலந்துகொண்டனர்.
துறையூர் தாஸன்.



