கோட்டைக்கல்லாறு பொதுநூலகம் மற்றும் வாசகர் வட்டத்தினர் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலையாற்றுகை மற்றும் பரிசளிப்பு விழா,நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் வாசகர் வட்டத் தலைவருமான எம்.சிவானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் கே.லெட்சுமிகாந்தன் பிரதம அதிதியாகவும் ஆலயங்களின் வண்ணக்கரும் ஊர்த் தலைவருமான எம்.தம்பிராஜா,பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பீ்.சுரேஸ் றோபட் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
கோட்டைக்கல்லாறு பிரதேச பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற கட்டுரைப் போட்டி மற்றும் நூலகத்தினை நாளாந்தம் பயன்படுத்திய மாணவர்களுக்கு,அதிதிகளினால் இதன்போது பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர்கள்,களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர்கள்,சமூக மட்ட அமைப்புகள்,பாடசாலை மாணவர்கள், அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்கள். ஆகியோர் இதன் போது கலந்துகொண்டனர்.
துறையூர் தாஸன்.




