அகில இலங்கை மக்கள் ஐன நாயகக் கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகின்றது. இருந்தபோதிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் கட்சியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. இக் கட்சியை பலப்படுத்த வேண்டியது தமிழ் மக்களின் கைகளிலே தங்கியுள்ளது.
அகில இலங்கை மக்கள் ஐனநாயக கட்சியானது தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற கட்சியாகும். கடந்த காலத்திலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கே எமது ஆதரவினை வழங்கிவருகின்றோம். இம்முறையும் கூட்டமைப்பிற்கே எமது ஆதரவை வழங்குகின்றோம். கூட்டமைப்பினர் சில விடயங்களில் கூடியகவனம் செலுத்தவேண்டும். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது இந்தந்த மாவட்டங்களுக்கு கட்சி தலைமைகள் நேரடியாக விஜயம் செய்து வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும்.
சமூகத்திற்காகப்பாடுபடுகின்றவர்கள், அர்ப்பணிப்புள்ளவர்கள், புத்திஜீவிகள் கல்விமான்களை இனம்கண்டு இணைக்க வேண்டும். தற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் களம் இறக்கப்பட்டவர்களில் புத்திஜீவிகள், மக்கள் செவ்வாக்கு அற்றவர்கள் மிக குறைவாகவுள்ளனர். ஏனைய சமூகம்சார்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் கல்விமான்களாகவும், சமூக அக்கறையுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
தமிழ் மக்கள் சார்பில் அம்பாறை மாவட்ட கச்சேரியில் நடைபெறுகின்ற கூட்டங்களுக்குச் செல்கின்ற பிரதிநிதிகள் அங்கு என்ன மொழியில் பேசப்போகின்றனர். ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழி அறிவு இல்லாதவர்களை தேர்தல்களில் நிறுத்துவதையும் கூட்டமைப்பினர் பரீPசீலினை செய்யவேண்டும்.
எதிர்வரும் காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமது அரசியல் பலத்தை பிரயோகித்து மீள்குடியேற்றம், காணிவிடுவிப்பு, முன்னாள்போராளிகளின் வாழ்வாதாரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம்,தொழில் வாய்ப்புக்கள், சிறைக்கைதிகள் விடயம் ஆகியவற்றில் கூடிய அக்கறை செலுத்தி தீர்வு காண முன்வரவேண்டும். என கேட்டுள்ளார்.
செ.துஜியந்தன்
