மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையில் கவிஞர் எஸ்.ரி.சீலனின் ஊர்க்குருவியின் உலா கவிதை நூல்வெளியீட்டுவிழா மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நூலின் முதற்பிரதி கடந்தவாரம் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு நூலாசிரியர் எஸ்.ரி.சீலன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சிவயோகச் செல்வன் ஸ்ரீ சாம்பசிவம் குருக்கள், பேராசிரியர் மா.செல்வராசா, கலாநிதி க.பிறேமகுமார், கலாநிதி க.இராஜேந்திரன், வைத்திய நிபுணர் க.அருளானந்தம், வைத்திய கலாநிதி கு.சுகுணன், கவிக்கோர் வெல்லவூர்க் கோபல், விரிவுரையாளர் திருமதி சுரேஸ் ஜெயப்பிரபா, சைவப்புலவர் வி.றஞ்சிதமூர்த்தி உட்பட கலை இலக்கியவாதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இங்கு மட்டக்களப்பு மண்ணின் முதுபெரும் பொக்கிஷங்களான கலைஞர்கள் வானொலி மாமா மாஸ்டர் சிவலிங்கம், கவிஞர் வாகரைவாணன், கவிஞர் கலாபூஹணம் தேனூரான் ஆகியோர் பட்டம் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
நூல்வெளியீட்டுரையினை சிரேஸ்டவிரிவுரையாளர் க.மோகனதாசன் நிகழ்த்தினார். நூல்வெளியீட்டுடன் 'மட்டுமண்ணே' பாடல் இறுவட்டும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
செ.துஜியந்தன்






