பாண்டிருப்பு ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் ஆலய முன்றலில் வைக்கப்ட்டிருந்த உண்டியலே உடைக்கப்பட்டுள்ளது.
இரவு நேரம் ஆலயத்தில் ஒருவரின் ஆள் நடமாட்டம் இருப்பதையும், அங்கு சத்தம் கேட்பதையும் அவதானித்த ஆலயத்தை சுற்றியிருந்த பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று பார்த்தபோது ஒருவர் அங்கிருந்த ஆலய உண்டியலை உடைத்துக் கொண்டிருந்துள்ளார். அத்துடன் சில்லறைக் காசுகளும் சிதறிக்கிடந்துள்ளது.
இவ் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கையும் மெய்யுமாக பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்த பின் கல்முனைப் பொலிஸசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின் குறித்த நபரை கைது செய்ததுடன் உடைக்கப்பட்ட உண்டியலையும் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த திருட்டில் ஈடுபட்ட நபரையும் உண்டியலையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ.துஜியந்தன்

