பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வு ஓய்வுநிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் தலைமையில் பாண்டிருப்பில் 11.12.2017 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தா கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக கவிஞர் கலாபூஷணம் தேனூரான் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மனிதாபிமான உதவி அமைப்பின் பணிப்பாளர் கே.விநாயகமூர்த்தி கலந்து கொண்டார்.
முதலில் பாரதியார் படத்திற்கு மூத்த கவிஞர் மு.சடாட்சரன் மலர் மாலை அணிவித்தார். இறைவணக்கம், தமிழ் மொழி வாழ்த்துப்பாடல் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. விருந்து நூல் நயவுரையினை எழுத்தாளர் சபாசபேஷன் நிகழ்த்தினார். பாரதியார் பற்றிய பகிர்வுகளை கவிஞர் மு.சடாட்சரன், கவிஞர் தேனூரான், கவிஞர் மருதமுனை விஜிலி, ஓவியர் ஆனந்தத்தில் ஒரு அனல் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.
செ.துஜியந்தன்