கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்று (02.01.2018) இன்று இடம்பெற்றது. கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி அவர்கள் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதலில் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் இசைக்கப்பட்ட பின்னர் அனைவரும் ஒருமித்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு இவ்வருடத்தின் முதல்நாள் கடமைகளை தொடங்கினர்.






