நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினராகிய நாம் ஆறு(6) ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளோம். ஆட்சி அதிகாரம் தொடர்பாக கலந்தாலோசிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மதிப்புக்குரிய துரைராஜசிங்கம் அவர்களுடனும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகோஸ்வரன் அவர்களுடனும் பல முறை தொடர்பை ஏற்படுத்தியும் சாதகமான பதில்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பதையிட்டு கவலை அடைகின்றோம்.
எமது சமூகத்தின் எதிர்கால நன்மை கருதி தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பாக பேசுவதற்கு எப்போதும் தயாராக உள்ளோம்.
திரவியம் ஜெயம்
_தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி_
