அனைத்துலக காச நோய் நாள் ( World Tuberculosis Day ), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும்
மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.
வரலாறு
மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர்
றொபேர்ட் கொக் ( Robert Koch ) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus )
பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும்
அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது.
கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
காச நோய் பரவுதல் பற்றியும், அதைத் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ம் தேதி, சர்வதேச காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது.
"டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது
பாதிப்பு
பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது
அறிகுறி
தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள்.
தொற்றும் வாய்ப்பு
நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும்.
புள்ளிவிவரப்படி...
ஆண்டுதோறும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். பெரும்பாலானோர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆசியாவில் அதிகம்
காசநோயின் பாதிப்பு, உலகம் முழுவதும் உள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.
சிகிச்சை
துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை. காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு தேவை.
அரசு, காச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
