இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் தமிழ் மாணவர்களின் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் 57728 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறவில்லை.
2018 இல நடைபெற்ற ; க.பொ.த சாதாரண பரீட்சைக்கு வடக்கு கிழக்கில் இருந்து 88501 பேர் பரீட்சைக்குத்தோற்றியிருந்தனர். இவர்களுள் 30773 மாணவர்கள் மாத்திரமே உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். மிகுதி 57728 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெறவில்லை என்பது பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள பரீட்சை முடிவுகளின் படி தெரியவந்துள்ளது.
வடக்கு கிழக்கில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் அதிகளவிலான மாணவர்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலே சித்திபெற்றிருந்தனர். யுத்தம் நிறைவு பெற்ற சமாதான காலத்தில் இம் மாகாணங்கள் கல்வியில் வீழ்ச்சியை சந்திப்பது கல்வி மான்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 17126 பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 6419 பேரும், அம்பாறைமாவட்டத்தில்; இருந்து பரீட்சைக்குதோற்றிய 22910 மாணவர்களில் 8163 பேரும், திருகோணமலையில் தோற்றிய 14291 மாணவர்களில் 8163 பேரும், யாழ்ப்பாணத்தில் தோற்றிய 17495 மாணவர்களில் 6337 பேரும், கிளிநொச்சியில் தோற்றிய 4404 மாணவர்களில் 1434 பேரும், மன்னாரில் தோற்றிய 3638 மாணவர்களில் 1321 பேரும், முல்லைத்தீவில் தோற்றிய 3494 மாணவர்களில் 1246 பேரும், வவுனியாவில் தோற்றிய 5143 மாணவர்களில் 1129 பேரும் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்
