சிவ வழிபாட்டு தலத்தை அகற்றுவதற்கு
காரைதீவு நிருபர்
நாவிதன்வெளியில் பூமரத்தடி சந்தியில் அமைக்கப்பட்டு உள்ள சிவ வழிபாட்டு தலத்தை அகற்ற உத்தரவிடுவதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மறுத்தது.
நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான முஹைதீன் பாபா நவாஸ் என்பவர் மேற்கொண்ட முறைப்பாட்டின் பெயரில் சவளக்கடை பொலிஸ் நிலைய பொலிஸார் இவ்வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட இடத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியை பெறாமல் அமைக்கப்பட்ட சிவ வழிபாட்டு தலத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் அது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட இடமாகும், அவ்வழிபாட்டு தலத்தை அகற்ற உத்தரவிடுகின்ற அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்று அறிவித்தார்.
