கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள பிரதேசசெயலாளர் கந்தையா லவநாதனின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களின் ஏற்பாட்டிலும் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி வசந்தினி யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பிலும் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதேச செயலாளர் ஜே.ரி.அதிசயராஜ் தலைமைதாங்கினார்.
பிரதேச செயலாளர் க.லவநாதன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒன்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளார். இங்குள்ள மாதர்கிராம அபிவிருத்திச்சங்கங்களை செயற்திறன் மிக்க சங்கங்களாக கட்டியெழுப்பியவர் என்ற வகையில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் பிரதேச செயலாளர் க.லவநாதன் சேவையைப் பாராட்டி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.








