பாண்டிருப்பை சேர்ந்த விஞ்ஞான கண்டுபிடிப்பாளரும், சட்டத்தரணியுமான தெய்வநாயகம் மதிவதனின் சிந்தனை, இயக்கம் ஆகியவற்றில் வேற்று கிரகவாசிகள் பூமியை தாக்க வருவது தொடர்பாக விஞ்ஞான புனைவு குறுபடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியை தாக்க வருகின்ற வேற்று கிரகவாசிகளை இலங்கை விஞ்ஞானிகள் குழு போராடி வெற்றி கொள்கின்ற இக்குறும்படத்துக்கு கப்சன் ஸ்ரீலங்கா - Caption Sri Lanka என்று பெயரிட்டு உள்ளார்.
முற்றிலும் பாடசாலை மாணவர்களை கொண்டு இலத்திரனியல் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இக்குறும்படத்தில் எம். நிரோஜன், ஆர். சுபாஸ்காந், ஜே. கதுர்ஜன், ரி. மேனுஜன், எஸ். லவக்சன், எஸ். சுபீஸ்கா ஆகியோர் நடித்து உள்ளதுடன் ஒளி, ஒலி பதிவு மற்றும் எடிட்டிங்கை கே. அருண்சாகர் மேற்கொண்டு உள்ளார்.
மதிவதன் இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழு நடத்திய ஆயிரம் படைப்புகளுக்கான புத்தாக்க போட்டியில் தேசிய விருது பெற்றவர் ஆவார். இவரின் கண்டு பிடிப்புகளில் கை ஊனமுற்றோர்கள் கால்களால் கணினி இயக்குவதற்கான தொழினுட்பம் முக்கியமானது.
வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தி, மனிதர்களை அழித்து, பூமியை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கூடிய சாத்திய கூறுகள் குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிற நிலையில் இக்குறுப்படத்தை எடுத்து உள்ளதாக இவர் தெரிவித்தார்.
-காரைதீவு நிருபர்-

