இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண பரீட்சையில் கஷ்டப்பிரதேசமான மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் சித்திரப்பாடததிற்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலைக்கும்இ பட்டிருப்பு கல்வி வலயத்திற்கும் பெருமைதேடிக்கொடுத்துள்ளனர் என பட்டிருப்பு கல்வி வலய அழகியல் துறைக்குப் பொறுப்பான உதவிக்கல்விப்பணிப்பாளர் க.சுந்தரலிங்கம் தெரிவித்தார்
இதற்கமைய விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களுள் 12 மாணவர்கள் (ய)ஏ தரச்சித்தியையும்இ 16 மாணவர்கள் (டி)பீ தரச்சித்தியையும்இ 7 மாணவர்கள்(உ) சீ தரச்சித்தியையும் பெற்று நூறுவீதம் சித்தியடைந்துள்ளனர். பட்டிருப்பு கல்வி வலயத்தில் சித்திரப்பாடத்தில் கடந்த நான்கு வருடங்களாக கூடியமாணவர்கள் சித்திரத்தில்(ய) ஏ தரம்இ (டி) பீ தரம் ஆகியசித்திகளைப் பெற்று சாதனை படைக்கின்ற பாடசாலையாகவும் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகாவித்தியாலம் திகழ்கின்றது.
அப்பாடசாலையில் சித்திரப்பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர் பு.சிறிகாந்தின் அர்ப்பணிப்பான சேவையை உதவிக்கல்விப்பணிப்பாளர் க.சுந்தரலிங்கம் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
