தேர்தல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடு தழுவிய ரீதியில் 15992096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான ஜீன் மாதம் நடத்தப்பட்ட வாக்காளர்களைப் புதுப்பித்தல், புதியவாக்காளர்களை இணைத்துக்கொள்ளல் அடிப்படையிலே மேற்பn எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுடன் 231229 பேர் புதிய வாக்காளர்களாவர்கள். 2018 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்திலே ஆகக்கூடுதலான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் 1751892 பேர் பதிவாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கொழும்பு மாவட்டத்தில் 1670403 பேர் வாக்காளர்களாக பதிவாகியுள்ளனர்.
வுhக்காளர் எண்ணிக்கை குறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் 281114 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். 2017 இல் பெலநறுவை மாவட்டமே குறைந்த வாக்காளர்கள் கொண்ட மாவட்டமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
