க. பொ. த சாதாரண தரம் படிக்கின்ற 16 வயது மாணவியின் கையை பிடித்து இழுத்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 17 வயது எதிரிக்கு எதிரான விசாரணை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பம் ஆனது.
மாணவி மேற்கொண்ட முறைப்பாட்டின் பெயரில் மத்தியமுகாம் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு தாக்கல் செய்தனர். கைதானவர் இந்நீதிமன்ற உத்தரவின் பெயரில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு எதிராக குற்றப்பத்திரம் கடந்த தவணை தாக்கல் செய்யப்பட்டது.
ஆயினும் இவர் குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில் கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் விசாரணை ஆரம்பமானபோது முறைப்பாட்டாளர் பொலிஸ் தரப்பில் பிரதான சாட்சியாக நீதிமன்ற அழைப்பாணையின் பெயரில் ஆஜராகி சாட்சியம் வழங்கினார். இவர் சாட்சியம் வழங்கியபோது நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்கள் திறந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எதிரியை ஆதரித்து சட்டத்தரணி ஹக்கீம் ஆஜரானார்.

காரைதீவு நிருபர்