கல்முனைப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மறைமுகமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் இதனைக்கட்டுப்படுத்த பொலிஸார் சிவில் உடையில் சேவையாற்றவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
கல்முனை பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை அண்டிய இடங்களிலுள்ள கடைகள், சிற்றுண்டிச் சாலைகள், ஹோட்டல்கள், ஜஸ்பழவியாபாரிகள், நடைபாதைவியாபாரிகள் போன்றோர் மாவா, ஸ்ராம்ப் போன்ற போதைப்பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடைவேளை விடுகின்ற 10.35 இற்கும் 11 மணிக்குட் இடைபட்ட காலப்பகுதியில் வீதியோரங்களில் மோட்டார் சைக்கிளில் நிற்கின்ற சிலர் மாணவர்களுடன் கதைத்தக் கொண்டிருப்பது போன்று பாசாங்கு செய்து இரகசியமாக விற்பனை செய்துவிட்டு ஓடிவிடுகின்றனர்.
அதிபர், ஆசிரியர்கள் தேவையற்ற விதத்தில் பாடசாலை இடைவேளை நேரங்களில் மாணவர்களை பாடசாலை வளாகத்திற்கு வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் கல்முனை பிரதேசத்தில் மாவா போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்ட்டிருந்தனர். பாடசாலைகளுக்கு அருகிலுள்ள விற்பனை நிலையங்களை அடிக்கடி பொலிஸார் கண்கானிக்கவேண்டும் எனவும் பெற்றோர்கள் கேட்கின்றனர்.
கல்முனை பிரதேசத்தை போதைப்பொருட் பாவனையற்ற பிரதேசமாக கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மதஸ்தாபனங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
செ.துஜியந்தன்
